/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தற்காலிக டிரைவர்களால் அரசு பஸ்கள் விபத்து
/
தற்காலிக டிரைவர்களால் அரசு பஸ்கள் விபத்து
ADDED : ஜன 10, 2024 01:12 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரசு பஸ்களை ஓட்டிய தற்காலிக டிரைவர்களால் விபத்துகள் ஏற்பட்டன.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடக்கும் நிலையில் திருநெல்வேலி கோட்டத்தில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 96 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில தடங்களில் பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டன.
வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் கார் மீது மோதியது. அந்த காரை ஓட்டியவர் பஸ் டிப்போவில் கொண்டு வந்து நிறுத்தினார். தங்களுக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறினர்.
தற்காலிக டிரைவரே, அந்த கார் உரிமையாளரிடம் சமாதானம் பேசி தானே பழுதை சரி செய்து தருவதாக கூட்டிச் சென்றார். இதே போல மற்றொரு இடத்தில் தற்காலிக டிரைவர் ஓட்டியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து லேசான சேதமுற்றது.

