/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
படிக்கச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன் கைது
/
படிக்கச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன் கைது
ADDED : ஜூன் 26, 2025 02:06 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் படிக்கச்சொல்லி தந்தை கண்டித்த நிலையில் இரவில் துாங்கிக் கொண்டிருந்தபோது அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மேலப்பாளையம் அசோகபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரியப்பன் 48. மனைவி சகுந்தலா. இரு மகள்கள், மூத்த மகன் தங்கப்பாண்டி 19, ஆகியோருடன் வசித்தார். தங்கப்பாண்டி, திருநெல்வேலி தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இதனிடையே மாரியப்பன் தன்னைப் போல மகனும் படிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதால் அடிக்கடி படிக்கும்படி கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவிலும் இதில் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் இரவில் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் துாங்கிய மாரியப்பன் தலையில் பெரிய கல்லை துாக்கி போட்டு கொலை செய்த மகன் தங்கப்பாண்டி வெளியூருக்கு தப்பி செல்வதற்காக திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். மாரியப்பன் கொலை செய்யப்பட்டதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மேலப்பாளையம் போலீசிற்கு தெரிவித்தார். தங்கப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.