/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் ஆனித்திருவிழா துவக்கம்
/
நெல்லையில் ஆனித்திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 01, 2025 12:07 AM

திருநெல்வேலி:
நெல்லையப்பர் கோயில் ஆனிபெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 8 ல் தேரோட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயிலில் ஆனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் கொடி மரம் முன் எழுந்தருளினர்.
சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடிப் பட்டம் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 8 ல் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் சுவாமி - அம்பாள் வீதி உலா வருவர்.