/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை வளர்க்கும் இடமாக மாறிய ரேஷன் கடை வளாகம்
/
கால்நடை வளர்க்கும் இடமாக மாறிய ரேஷன் கடை வளாகம்
ADDED : ஜூலை 03, 2024 12:59 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு துவக்கப்பள்ளி அருகே ரேஷன் கடை மற்றும் நுாலகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தை ஆக்கிரமித்து அதே பகுதியை சேர்ந்த சிலர் கால்நடைகளான பசு, ஆடுகளை கட்டி பராமரிக்கும் இடமாக மாற்றியுள்ளனர்.
இதனால் அப்பகுதி அசுத்தமாக காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் ரேஷன் கடை நுாலகத்திற்கு வருவோர் மற்றும் பள்ளிக்கு குழந்தைகளை கூட்டி செல்லும் பெற்றோர் கால்நடைகள் குழந்தைகளை தாக்கும் என்ற அச்சம் உள்ளதாக கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கால்நடைகளை கட்டி பராமரிப்பதை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.