/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதரில் மறையும் சாலையோர தடுப்பு
/
புதரில் மறையும் சாலையோர தடுப்பு
ADDED : ஜூலை 28, 2024 02:25 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து கோரகுப்பம் வழியாக பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நாதன்குளம் பகுதியில், சிக்கலான சாலை திருப்பம் அமைந்துள்ளது.
வாகன ஓட்டிகளின் பார்வைக்கு, எதிரில் வரும் வாகனங்கள் எளிதில் புலப்படாத நிலை உள்ளது. இதனால், இந்த பகுதியில் ஏராளமான விபத்துகள் நடந்து வந்தன. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இந்த திருப்பத்தில் சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் நடப்பட்டன.
வேகத்தடையும், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு சாலை திருப்பத்தை உணர்த்தும் பிரதிபலிப்பு சிக்னல்களும் நிறுவப்பட்டன. ஆனால், சாலையோர தடுப்பு மற்றும் பிரதிபலிப்பு சிக்னல்கள் தற்போது புதரில் மறைந்து வருகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் மீண்டும் விபத்து அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணி, வாகன ஓட்டிகளுக்கு நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் விதமாக, புதரை விரைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரகுப்பம் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த மார்க்கமாக, திருவள்ளூர், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.