/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு
/
ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணியில் நேற்று முன்தினம் ஹிந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் ரவி தலைமையில், அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இதில் திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.
உள்ளூர் பிரமுகர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோவில்களில் ஒரு வேலை பூஜை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், 25 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.