/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்களிடம் கிண்டல் இருவருக்கு வெட்டு
/
பெண்களிடம் கிண்டல் இருவருக்கு வெட்டு
ADDED : ஜூன் 20, 2024 09:26 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 26. இவரது ஊரில் நேற்று முன்தினம் இரவு துர்க்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், 24, நாகராஜ், 23, பிரசாத், 24, பிரதாப்,26 மற்றும் சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்தனர். இதை பார்த்த ஜெயராஜ் மற்றும் அவரது நண்பர் சக்திவேல், 21 'நம்ம ஊர் பெண்களை ஏன் கிண்டல் செய்கிறீர்கள்' என கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் ஜெயராஜ், சக்திவேல் ஆகிய இருவரை கைகளால் தாக்கியும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து மப்பேடு அதிகத்துார் சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.