/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2,591 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் 51,800 கிலோ விதை வினியோகம்
/
2,591 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் 51,800 கிலோ விதை வினியோகம்
2,591 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் 51,800 கிலோ விதை வினியோகம்
2,591 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் 51,800 கிலோ விதை வினியோகம்
ADDED : ஜூலை 28, 2024 10:56 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை, 2,591 ஏக்கர் நிலங்களுக்கு, 51,800 கிலோ பசுந்தாள் உரம் விதை வினியோகிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' திருவள்ளுர் மாவட்டத்தில் 2024 - -25ல் பசுந்தாள் உர சாகுபடி ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு, இறவைப் பாசன பகுதிகளில், மாவட்டத்தில் 12,000 ஏக்கரில் 1.20 கோடி ரூபாய் மானியத்தில் பசுந்தாள் உர பயிர் பயிரிட திட்டமிட்டு விவசாயிகளுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையம் வாயிலாக வழங்கப்படுகிறது. பசுந்தாள் உர விதைகள் 1 கிலோ விலையான 99.50 ரூபாயில், 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 2,591 ஏக்கருக்கு 51,800 கிலோ பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை விவசாயிகள் மானியத்தில் பெற, அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.