/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரெக்டான நேரத்திற்கு வராத அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
/
கரெக்டான நேரத்திற்கு வராத அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
கரெக்டான நேரத்திற்கு வராத அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
கரெக்டான நேரத்திற்கு வராத அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
ADDED : ஜூன் 21, 2024 01:36 AM

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், மாளந்துார் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இங்குள்ள மாணவர்கள் வெங்கல், மெய்யூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கல்வி பயில்கின்றனர்.
மேற்கண்ட இடங்களுக்குச் செல்ல இப்பகுதி மாணவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்பவர்கள் அரசு போக்குவரத்தை நம்பி உள்ளனர். இப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
சில தினங்களாக இந்த அவல நிலை நீடித்த நிலையில், ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று திருவள்ளூர்- ஆவாஜிப்பேட்டை இடையே இயக்கப்படும் மாநகர அரசு பேருந்து, ஊத்துக்கோட்டை - மெய்யூர் செல்லும் விழுப்புரம் கோட்ட பேருந்து, ஆவடி - மாளந்துார் இடையே இயக்கப்படும் மாநகர பேருந்து ஆகிய மூன்று பேருந்துகளையும் மாணவர்கள், பொதுமக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துதுறை மண்டல மேலாளர் புண்ணியமூர்த்தி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தினர்.
இனி பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல மேலாளர் உறுதி கூறினார். இதனால் சமாதானம் அடைந்த மாணவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.