/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரவு - செலவு கணக்கில் குளறுபடி கும்மிடி பேரூராட்சி கவுன்சிலர்கள் புகார்
/
வரவு - செலவு கணக்கில் குளறுபடி கும்மிடி பேரூராட்சி கவுன்சிலர்கள் புகார்
வரவு - செலவு கணக்கில் குளறுபடி கும்மிடி பேரூராட்சி கவுன்சிலர்கள் புகார்
வரவு - செலவு கணக்கில் குளறுபடி கும்மிடி பேரூராட்சி கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூன் 21, 2024 11:18 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சகிலா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன், துணை தலைவர் கேசவன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். வரவு, செலவு, பிறப்பு, இறப்பு, கோரிக்கைகள், திட்ட அனுமதி உள்ளிட்டவை மீது, 25தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.
அப்துல்கரீம்- தி.மு.க.,: தீர்மான நகலில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு மாத வரவு கணக்குடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வரி வசூல் செய்த கணக்கு முற்றிலும் தொடர்பு இல்லாமல் வேறுபடுகிறது. அதேபோன்று செலவு கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை. பணிகள் தேர்வின் போது ஒருதலை பட்சமாக செயல்படாமல், அனைத்து கவுன்சிலர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். மோசமான நிலையில் உள்ள பாப்பான்குளம் சுடுகாட்டைசீரமைத்து முறையாகபராமரிக்க வேண்டும்.
கருணாகரன்- தி.மு.க.,: கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலில் இருந்து ரெட்டம்பேடு சாலை வரையிலான தார் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. அவ்வழியாக மிதிவண்டியில் செல்லும் மாணவியர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.
ரவி - அ.தி.மு.க.,: கோட்டக்கரை அண்ணாநகர் முதல், இரண்டு மற்றும் ஐந்தாம் தெருக்களில் பழுதான மழைநீர் கால்வாய்களை அகற்றி புதிய கால்வாய்கள் அமைக்க வேண்டும்.
நஸ்ரத் - தி.மு.க.,: மா.பொ.சி., நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சாலை மற்றும் கால்வாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. உடனடியாக சாலை மற்றும் கால்வாய்களை புதுப்பிக்க வேண்டும்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என செயல் அலுவலர்பாஸ்கரன் தெரிவித்தார்.