ADDED : ஜூலை 30, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, பூவலை கிராமத்தில் உள்ள அய்யர் தோட்டத்தில், யக்ஞ சீதளா மாரியம்மன் கோவில் உள்ளது.
ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று பூவலை பெருமாள் கோவிலில் இருந்து, கிராம பெண்கள், 108 பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.