/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி எதிரே குளம்போல் கழிவுநீர்
/
அரசு பள்ளி எதிரே குளம்போல் கழிவுநீர்
ADDED : ஜூன் 21, 2024 01:29 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருமணிக்குப்பம் ஊராட்சி. இங்குள்ள பண்ணுார் - வடமங்கலம் நெடுஞ்சாலையோரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, கிளை நுாலகம், அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளன.
இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அரசு பள்ளி எதிரே குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அரசு பள்ளி மாணவ, மாணவியர், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் நுாலகத்திற்கு வரும் வாசகர்கள், பகுதிவாசிகள் என அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாணவ, மாணவியர், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும் கழிவுநீரை அகற்றுவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளி எதிரே குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.பி., அலுலவக சாலை
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகம், 30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் அமைந்துள்ளது.
இங்கு, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட விளையாட்டுமைதானம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லுாரி, மாவட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு கட்டடம், மாவட்ட தோட்டக்கலை அலுவலகம், மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பிரியதர்ஷினி கேட்டுக் கொண்டுள்ளார்.