/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆட்டுக்காக பஞ்சாயத்து: எட்டு பேர் கைது
/
ஆட்டுக்காக பஞ்சாயத்து: எட்டு பேர் கைது
ADDED : ஜூலை 31, 2024 02:57 AM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் கோபி, 23. இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாணிவிலாசபுரத்தை சேர்ந்த பாலு என்பவரின் ஆட்டின் மீது மோதினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வாணிவிலாசபுரத்தைச் சேர்ந்த அருண், அப்பு, ஆகாஷ், சாமியப்பன், பிரகாஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டைக்கு வந்து, கோபியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோபி தரப்பில் தேவராஜ், நரேந்திரகுமார், பவன், மோகன், நேதாஜி, வினோத் ஆகியோர், 'ஊரு விட்டு ஊரு வந்து பஞ்சாயத்து பேசலாமா' எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில், கோபி, அருண், அப்பு, ஆகாஷ் ஆகியோர் காயமடைந்தவர்கள், பொதட்டூர்பேட்டை மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்படி, கோபி உள்ளிட்ட எட்டு பேரையும் கைது செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.