/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதாரமற்ற நிலையில் பெரியபாளையம்
/
சுகாதாரமற்ற நிலையில் பெரியபாளையம்
ADDED : ஜூன் 08, 2024 11:08 PM

பெரியபாளையம்: சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. இங்கு, 3,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. மேலும், புகழ்பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிலையம் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வர். இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. பெரியபாளையத்தில் இருந்து ஆரணி செல்லும் சாலை வளைவில், சாலையில் குப்பை தேங்கி உள்ளது.
வாகனங்கள் செல்லும் போது காற்றில் குப்பை பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. மேலும்,குடியிருப்புவாசிகள் குப்பையை அங்குள்ள கால்வாயில் கொட்டுவதால், ஆரணி ஆற்றில் குப்பை தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் ஊராட்சியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.