/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் மனு
/
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் மனு
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் மனு
மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த எம்.பி.,யிடம் மனு
ADDED : ஜூலை 18, 2024 12:59 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் காவல் நிலையம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு, 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்பை தொடர, தனியார் பள்ளிகளையே நாட வேண்டி உள்ளது. இதற்கு காரணம், மீஞ்சூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதுவும் இல்லை.
இப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி வருகிறது.
பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் சார்பில், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
மீஞ்சூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. மீஞ்சூர் காவல் நிலையம் அருகே செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். இதற்கு தேவையான இடவசதி அருகில் உள்ளது.
உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் அரசுக்கு சொந்தமான இடங்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. அந்த இடத்தை மேல்நிலைப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தலாம்.
இதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.