/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் வம்பு பிரபல ரவுடிக்கு 'காப்பு'
/
பெண்ணிடம் வம்பு பிரபல ரவுடிக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 28, 2024 02:42 AM
திரு.வி.க.நகர்:திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசவுந்தரி, 41; வீட்டு வேலை செய்பவர். கடந்த 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு, ஒரு வீட்டில் வேலையை முடித்து, திரு.வி.க.நகர் மரியநாயகம் பிரதான சாலையில் உள்ள மளிகை கடையில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, சரித்திர பதிவேடு குற்றவாளியான பெரம்பூரைச் சேர்ந்த 'காக்கா' ரவி, 45, என்பவர், மது போதையில் அவ்வழியே நடந்து வந்தார்.
மளிகை கடை முன் நின்று கொண்டு, அசிங்கமான வார்த்தைகளால் தொடர்ந்து திட்டி கொண்டிருந்தார்.
இதில் அதிருப்தியடைந்த ஞானசவுந்தரி, 'யாரை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?' என, ரவுடியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ரவி, 'உன்னை தான் திட்டுகிறேன்' என கூறியதோடு, ஞானசவுந்தரியின் கன்னத்தில் ரவுடி ஓங்கி அறைந்துள்ளார்.
இதில் தாடையில் காயமடைந்த ஞானசவுந்தரி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின்படி, திரு.வி.க.நகர் போலீசார், 'காக்கா' ரவியை, நேற்று கைது செய்தனர்.