/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்பாயால் மூடாத சவுடு மணல் லாரிகள் வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் அவதி

ADDED : ஜூலை 27, 2024 01:57 AM

கடம்பத்துார்:பேரம்பாக்கம் அடுத்த தக்கோலம் பகுதியில் ஏரியிலிருந்து சவுடு மணல் எடுக்கும் அரசு அனுமதியுடன் நடந்து வருகிறது.
இந்த லாரிகள் தக்கோலம் ஏரியிலிருந்து பேரம்பாக்கம், மப்பேடு வழியாக தண்டலம் -அரக்கோணம் சாலையில் நெடுஞ்சாலை பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சில நேரங்களில் செங்கல் சூளைகளுக்கும் சவுடு மணல் லாரிகள் செல்கின்றன.
இவ்வாறு சவுடு மணல் கொண்டு செல்லப்படும் லாரிகள் தார்பாய் போடாமல் செல்வதால் இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப் பணிகளும் நடந்து வரும் வேளையில் தார்பாய் போடாமல் அசுர வேகத்தில் செல்லும் சவுடு மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சவுடு மணல் கொண்டு செல்லும் லாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.