/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலைய நுழைவுவாயிலில் கழிவுநீர் திருமழிசை பகுதிவாசிகள் கடும் அவதி

ADDED : ஜூலை 28, 2024 02:44 AM

திருவளளூர்:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது திருமழிசை பேருந்து நிலையம்.
இங்கு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில், ஜெகநாதபெருமாள் திருமழிசை ஆழ்வார் போன்ற புகழ்பெற்ற கோவில்கள் நிறைந்த பேரூராட்சியாகும்.
இங்கிருந்து பிராட்வே, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு தினமும், 50க்கும் மேற்ப்பட்ட மாநகர பேருந்துகளும், இந்த பேரூாட்சி வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, ஆகிய பகுதிகளிலிருந்து இந்த ஊர்வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் என தினமும், 150க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால் நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையம் முன்புறம் கழிவுநீரை அகற்றவும் கழிவுநீர் சேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.