/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் சேகரிப்பு மையம் பழுது சாலையில் வெளியேறும் அவலம்
/
கழிவுநீர் சேகரிப்பு மையம் பழுது சாலையில் வெளியேறும் அவலம்
கழிவுநீர் சேகரிப்பு மையம் பழுது சாலையில் வெளியேறும் அவலம்
கழிவுநீர் சேகரிப்பு மையம் பழுது சாலையில் வெளியேறும் அவலம்
ADDED : ஜூன் 08, 2024 11:06 PM

திருவள்ளூர்: டோல்கேட் அருகில் கழிவு நீர் சேகரிப்பு மையத்தில், 'பம்ப்' பழுதானதால், ஊழியர்கள் இரவு நேரத்தில் சாலையில் கழிவு நீரை அகற்றி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வார்டு எண்.1 பகுதியான டோல்கேட் பகுதியில் இருந்து, பூங்கா நகர், பத்மாவதி நகர் உள்பட, நான்கு இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு மையம் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் கழிவு நீர், பாதாள சாக்கடை வழியாக, 'பம்ப்' செய்யப்பட்டு, புட்லுார் ஏரி அருகில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கூவம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, 10 ஆண்டுக்கும் மேலான நிலையில், நகரின் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. நகரின் பிரதான பகுதிகளான ஜே.என்சாலை, ராஜாஜிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், டோல்கேட் அருகில் சேகரமாகும் கழிவுநீர், அருகில் உள்ள வேளாண்மை வணிக வாணிப கிடங்கு அருகில் கழிவு நீர் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து, புட்லுார் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கழிவு நீர் செல்ல முடியாததால், இரவு நேரத்தில் ஊழியர்கள் சிலர், கழிவு நீரை திறந்து, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் திறந்து விடுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் வசிப்போருக்கு கொசு தொல்லையால், டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீர் அடைப்பை சீர்படுத்தி, பாதாள சாக்கடை வழியாக கழிவு நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.