/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிக் பாக்சிங் 63 பதக்கங்கள் குவித்தது தமிழகம்
/
கிக் பாக்சிங் 63 பதக்கங்கள் குவித்தது தமிழகம்
ADDED : ஜூலை 31, 2024 05:11 AM

சென்னை,: கோவா வாக்கோ கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தேசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, கோவாவில் நடந்தது.
இதில், 19 - 40 வயதுடைய சீனியர் மற்றும் 41 - 55 வயதுடைய மாஸ்டர்களுக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 12 பெண்கள் உட்பட 66 வீரர்கள் தமிழக அணியாக பங்கேற்றனர்.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக அணி, 23 தங்கம், 18 வெள்ளி, 22 வெண்கலம் என, மொத்தம் 63 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியது.
மஹாராஷ்டிரா மாநிலம் 33 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என, 93 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக முதலிடத்தை பிடித்தது.
போட்டியில், தங்கப் பதக்கம் வென்றவர்கள், செப்., 24ல் உஸ்பெகிஸ்தானில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும், ஆக., 6ல் துவக்கும் ஆசிய போட்டியிலும் பங்கேற்க தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.