/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது
/
வீட்டில் புகுந்து நகை திருடியவர் கைது
ADDED : ஜூன் 21, 2024 11:22 PM
திருத்தணி:திருத்தணி அடுத்தகே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கோவிந்தன், 58. இவர்,நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் பீரோவை திறந்து, அங்கு வைத்திருந்த ஒன்றரை சரவன் நகை, 7,500 ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றார். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவிந்தன் எழுந்த போது, பீரோவே திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து,எல்.என்.கண்டிகை சேர்ந்த தரண்சாய், 27, என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் நகை, பணத்தை திருடியது தெரிந்தது. அவரை கைதுசெய்தனர்.