/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர உணவகங்களில் வீட்டு சிலிண்டர்கள் பயன்பாடு
/
சாலையோர உணவகங்களில் வீட்டு சிலிண்டர்கள் பயன்பாடு
ADDED : ஜூலை 23, 2024 08:52 PM
கும்மிடிப்பூண்டி:சாலையோர உணவகங்களில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் சம்பந்தமான சமையல் பயன்பாட்டிற்கு, கமர்ஷியல் காஸ் சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, எளாவூர், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர உணவகங்கள், சுண்டல், சமோசா, சிப்ஸ், போண்டா, பஜ்ஜி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய தேதியில், 19 கிலோ எடை கொண்ட கமர்ஷியல் காஸ் சிலிண்டர், 1,809 ரூபாய்க்கும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், 818 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதன்படி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது.
தொழில் நோக்குடன், வீட்டு உபயோக காஸ் பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க கூடாது. கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் துறையினர், சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.