/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
711 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.89 கோடி பட்டுவாடா
/
711 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.89 கோடி பட்டுவாடா
711 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.89 கோடி பட்டுவாடா
711 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.23.89 கோடி பட்டுவாடா
ADDED : பிப் 29, 2024 07:12 PM
திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகள், 711 பேருக்கு, முதல் தவணையாக 23.89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில். கடந்த நவ., 24ம் தேதி முதல், நடப்பு அரவை பருவம் துவக்கப்பட்டது.
wஇந்தாண்டு, 25 கோடி கிலோ அரவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை, 14 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்யப்பட்டுள்ளது. வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரிமாற்றம் முறையில், 96.20 லட்சம் கிலோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆலை பகுதியில் அதிகளவு மழைப்பொழிவு இருந்ததால், நடப்பாண்டில் ஆலை அரவை தொடர்ச்சியாக இயங்கி வருவதுடன், 8.50 சதவீத சர்க்கரை கட்டுமானமும் பெறப்பட்டுள்ளது.
ஆலைக்கு, கரும்பு சப்ளை செய்த 711 விவசாயிகளுக்கு, முதல் தவணையாக, 23.89 கோடி ரூபாய் கரும்பு கிரய தொகை அவரவர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஐந்து அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை பருவம் நடபெற்று வருகிறது.
மேலும், இயந்திர அறுவடை மேற்கொள்ளப்பட்டதால், கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

