/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு 3 பேர் கைது; 11 சவரன் மீட்பு
/
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு 3 பேர் கைது; 11 சவரன் மீட்பு
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு 3 பேர் கைது; 11 சவரன் மீட்பு
அரசு ஊழியர் வீட்டில் திருட்டு 3 பேர் கைது; 11 சவரன் மீட்பு
ADDED : பிப் 29, 2024 09:43 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த வரதராஜன் நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர் அமேதாடான் போஸ்கோ, 59. சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தான லட்சுமி, 55; மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சந்தான லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டை பூட்டிவிட்டு, கடந்த 25ம் தேதி காலை சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பின், மாலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து அமேதாடான் போஸ்கோ கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவை வைத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், ஆவடி, மோரை பகுதியைச் சேர்ந்த விக்கி, 22, பொன்னேரி குண்ணம்மஞ்சேரியைச் சேர்ந்த முத்து, 27, மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த மதன், 19, என தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த திருவள்ளூர் நகர போலீசார், அவர்களிடமிருந்து 11.5 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

