/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விமானத்தில் இயந்திர கோளாறு 324 பயணியர் உயிர் தப்பினர்
/
விமானத்தில் இயந்திர கோளாறு 324 பயணியர் உயிர் தப்பினர்
விமானத்தில் இயந்திர கோளாறு 324 பயணியர் உயிர் தப்பினர்
விமானத்தில் இயந்திர கோளாறு 324 பயணியர் உயிர் தப்பினர்
ADDED : பிப் 29, 2024 10:45 PM
சென்னை:ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், பாரிஸில் இருந்து கிளம்பி தினமும் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னைக்கு வந்து, அதிகாலை 2:05 மணிக்கு, இங்கிருந்து பாரிஸ் புறப்பட்டு செல்லும்.
அந்த விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து பயணியரை இறக்கியது.
அதிகாலையில் கிளம்புவதற்காக நிறுத்தப்பட்ட விமானத்தில் 308 பயணியர், 16 விமான ஊழியர்கள் ஏறினர்.
விமானத்தை இயக்கும்போது, அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டறிந்தார். ஓடுபாதையிலே விமானத்தை நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, விமானத்தின் இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, ஏர் பிரான்ஸ் விமானம் இழுத்துச் செல்லப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழுவினர் வந்து, பழுதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பயணியர், விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தவிர, பழுது பார்ப்பு பணியும் முடியாததால், பாரிஸ் செல்ல வேண்டிய ஏர் பிரான்ஸ் விமானம், நேற்று ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் ஓய்வறைகளில் இருந்த ஏர் பிரான்ஸ் பயணியர், சென்னை நகரில் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு, சென்னையில் இருந்து இன்று புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
சரியான நேரத்தில் விமானத்தின் இயந்திர கோளாறு கண்டுபிடித்து நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 324 பேர் உயிர் தப்பினர்.

