/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி
/
திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி
திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி
திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி
ADDED : பிப் 01, 2024 08:10 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 15வது மாநில நிதிக்குழு, 2024 - 25ம் ஆண்டு திட்டத்தின் மூலம், புதியதாக தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, சுகாதார வளாகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒன்றியத்தில், 15வது மாநில நிதிக்குழு மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, 4.50 கோடி ரூபாய் திட்டமதிப்பு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
அதாவது ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை திட்டமதிப்பு தயாரித்துள்ளோம்.
நிதியுதவி கிடைத்ததும், மூன்று மாதங்களில் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.