/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
7 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்
/
7 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்
ADDED : ஜூன் 04, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சிக்னல் அருகே, அணுகு சாலையை ஒட்டியுள்ள காலி இடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் நேற்று, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருப்பு நிற பையுடன் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், பட்டாபிராம், தண்டுரையைச் சேர்ந்த முகமது ரில்வான், 25, என்பதும், 7 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சவை பறிமுதல் செய்தனர்.