sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 மாவட்டங்களில் 7 நெல் சேமிப்பு கிடங்குகள்: ரூ.22 கோடியில் 6 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

/

3 மாவட்டங்களில் 7 நெல் சேமிப்பு கிடங்குகள்: ரூ.22 கோடியில் 6 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

3 மாவட்டங்களில் 7 நெல் சேமிப்பு கிடங்குகள்: ரூ.22 கோடியில் 6 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

3 மாவட்டங்களில் 7 நெல் சேமிப்பு கிடங்குகள்: ரூ.22 கோடியில் 6 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்


ADDED : பிப் 29, 2024 09:45 PM

Google News

ADDED : பிப் 29, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், நெல் சேமிப்பு நிலையங்களுக்கு, ஏழு கிடங்குகள் கட்டும் பணி நேற்று முன்தினம் துவக்கப்பட்டு உள்ளது. 22 கோடி ரூபாயில், இந்த பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க, நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிட்டு உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில், ஆண்டுதோறும், 4 லட்சம் ஏக்கர் நிலங்களில், நெல், பயறு, எண்ணெய் வித்துக்கள் ஆகிய பலவித பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

திறந்தவெளி மையம்


வேளாண் துறையினர் பரிந்துரையின் படி, 100க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பினர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, நெல் கொள்முதல் செய்கின்றனர்.

நுகர்பொருள் வாணிப கழகத்திடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, 1 கிலோ சன்ன ரகம், 23.10 ரூபாய் மற்றும் குண்டு ரக நெல்லுக்கு, 23.40 ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நெல் மூட்டை, 924 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை, திறந்தவெளி மையத்தில் சேமித்து வந்தனர்.

இங்கு சேமிக்கப்படும் நெல் மூட்டைக்கு போதிய கிடங்கு மற்றும் கூரை வசதி இல்லாததால், கோடை மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கிடங்குகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, தமிழக அரசு உறுதியளித்து இருந்தது.

75,000 நெல் மூட்டைகள்


அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் பகுதியில், 5 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு, 14.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துாரில் என, தலா 3.75 கோடி ரூபாய் செலவில் இரு கிடங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மூன்று நெல் சேமிப்பு நிலையங்களில், ஏழு கிடங்குகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளன.

இதன் கட்டுமான பணிகளை, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கம் கிராம நெல் சேமிப்பு கிடங்கில், 30 லட்சம் கிலோ நெல் இருப்பு வைக்கலாம். அதாவது, 75,000 நெல் மூட்டைகள் அடுக்கலாம்.

ஒரு நெல் கிடங்கிற்கு, 75,000 நெல் மூட்டைகள் வீதம், 5 கிடங்குகளிலும், 3.75 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும்.

அதேபோல, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், தலா 1 லட்சம் நெல் மூட்டைகள் என, 2 லட்சம் நெல் மூட்டைகளை அடுக்கலாம் என, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, 9.16 கோடி கிலோ நெல்லை நுகர்பொருள் வாணிப கழகத்தினர் கொள்முதல் செய்து உள்ளனர்.

இதை, 40 கிலோ எடை கொண்ட, 22.90 லட்சம் நெல் மூட்டைகளாக, கட்டவாக்கம் நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு திறந்தவெளி மையத்தில் சேமித்து வந்தனர்.

கூரை வசதி


இது குறித்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கட்டவாக்கம் கிராமத்தில், 30 லட்சம் கிலோ நெல் மூட்டை இருப்பு வைக்கும் அளவிற்கு கிடங்குகள் கட்டப்பட உள்ளன.

ஒவ்வொரு கிடங்குக்கும், காற்றோட்டத்துடன் கூடிய கூரை வசதி ஏற்படுத்தும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகளை, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மழைக்காலம் துவங்குவதற்கு முன் பணிகள் நிறைவு பெறும். அதேபோல, தான் பிற மாவட்டங்களிலும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us