/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டாக அரளியை சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 'சீரியஸ்'
/
விளையாட்டாக அரளியை சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 'சீரியஸ்'
விளையாட்டாக அரளியை சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 'சீரியஸ்'
விளையாட்டாக அரளியை சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 'சீரியஸ்'
ADDED : செப் 12, 2025 10:31 PM
திருத்தணி:திருத்தணி அமிர்தாபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, திருத்தணி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று, அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரவிச்சந்திரன், 14, சந்தோஷ், 14, இருவரும், வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். ஆசிரியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் அரளி விதையை சாப்பிட்டது தெரிய வந்தது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருத்தணி போலீசார் விசாரணையில், 'மாணவன் ரவிச்சந்திரன் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போது, சாலையோரத்தில் இருந்த அரளிக்காயை பறித்து கொண்டு வகுப்பறைக்கு வந்துள்ளார்.
'அரளிக்காய் சுவை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ரவிச்சந்திரனும், சந்தோஷும் வகுப்பறையில், விளையாட்டுத்தனமாக சாப்பிட்டுள்ளனர் ' என, தெரியவந்துள்ளது.