/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செய்கை மொழியை கற்க விழிப்புணர்வு மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்
/
செய்கை மொழியை கற்க விழிப்புணர்வு மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்
செய்கை மொழியை கற்க விழிப்புணர்வு மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்
செய்கை மொழியை கற்க விழிப்புணர்வு மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்
ADDED : ஜன 27, 2024 01:22 AM

கும்மிடிப்பூண்டி:குஜராத் மாநிலம், வல்சாத் பகுதியை சேர்ந்தவர் நிகுஞ்ச், 29. காது கேளாத, வாய் பேச முடியாதவர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, 2023 டிசம்பர் 12ம் தேதி குஜாராத்தில் இருந்து, 11,000 கி.மீ., சைக்கிள் பயணத்தை துவங்கினார்.
குஜராத்தில் துவங்கி, மஹாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழகம் வழியாக, அஸாம், மேற்கு வங்கம், காஷ்மீர் சென்று அங்கிருந்து மீண்டும் தன் பயணத்தை குஜராத்தில் முடிக்க உள்ளார்.
இவர் 26 மாநிலங்கள் வழியாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளார்.
நேற்று சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திரா நோக்கி சென்றார்.
பயணம் குறித்து நிகுஞ்ச் கூறியதாவது:
இந்திய செய்கை மொழியை மேலும் எளிதாக அணுக கூடிய வகையில் பிரத்யேகமாக வடிவமைத்து, கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்திய செய்கை மொழியை கற்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் வேறுபாடு இன்றி சம அந்தஸ்துடன் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து என் கோரிக்கைளை தெரிவிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

