/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மளிகை கடையில் புகுந்து கஞ்சா வாலிபர் ரகளை
/
மளிகை கடையில் புகுந்து கஞ்சா வாலிபர் ரகளை
ADDED : மே 31, 2025 02:30 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் யாதவ தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் வேல்முருகன், 45. இவர், நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, கஞ்சா போதையில் வந்த சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த யோகேஷ், 20, பொருட்களை வாங்கி விட்டு பணம் தராமல் வேல்முருகனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
மேலும், கடையில் இருந்த எடை மிஷின், பொருட்களை உடைத்ததோடு, செங்கலால் வேல்முருகனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து, வேல்முருகனின் மகன் ஹரிஹரன் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா போதை வாலிபர்கள் மளிகை கடையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பழையனூர், திருவாலங்காடு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.