/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நனைந்த நெல்லை பாதுகாக்க வேளாண் துறை மாற்று ஏற்பாடு
/
நனைந்த நெல்லை பாதுகாக்க வேளாண் துறை மாற்று ஏற்பாடு
நனைந்த நெல்லை பாதுகாக்க வேளாண் துறை மாற்று ஏற்பாடு
நனைந்த நெல்லை பாதுகாக்க வேளாண் துறை மாற்று ஏற்பாடு
UPDATED : செப் 19, 2025 04:07 AM
ADDED : செப் 18, 2025 11:29 PM
திருவள்ளூர்:சிற்றம்பாக்கம் கிராமத்தில் மழையால் நனைந்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய, வேளாண் துறையினர் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.
திருவள்ளூர் வட்டம், கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் சொர்ணவாரி நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்து விற்பனைக்காக, சிற்றம்பாக்கம் நெல் உலர்த்தும் களத்தில், காயவைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நெல் மணிகள் நனைந்து, முளைப்பு விட்டுள்ளன.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
பேரம்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில், பதிவு செய்து பல நாட்களாகியும், அங்கு நாளொன்றுக்கு, 400 மூட்டைக்கு மேல், வாங்குவதில்லை. இதனால், காயவைத்த நெல் மணிகள், மழையில் நனைந்து, முளைத்து வருகிறது.
இவ்வாறு கூறினர்.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி கடம்பத்துார் ஒன்றிய வேளாண் துறையினர் உடனடியாக, சிற்றம்பாக்கம் கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின், சிற்றம்பாக்கம் கிராம விவசாயிகள், அருகில் உள்ள, இருளஞ்சேரி, கூவம், குமாரசேரி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
சொர்ணவாரி பருவத்தில் 64,580 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை துவங்கி உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 7.50 கோடி கிலோ நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில், 65 இடங்ளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, இதுவரை, 1,724 விவசாயிகளிடம் இருந்து, 1.28 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. மழை காலங்களில் விவசாயிகள் கொண்டு வரும், நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க, தார்பாலின் உறை வழங்க வேண்டும். கொள்முதல் செய்த அன்றைய தினமே, கிடங்குகளில் சேமிக்க வேண்டும்.
மு.பிரதாப், கலெக்டர், திருவள்ளூர் மாவட்டம்.