/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய வாக்காளர் தினத்தில் மாணவியருக்கு விழிப்புணர்வு
/
தேசிய வாக்காளர் தினத்தில் மாணவியருக்கு விழிப்புணர்வு
தேசிய வாக்காளர் தினத்தில் மாணவியருக்கு விழிப்புணர்வு
தேசிய வாக்காளர் தினத்தில் மாணவியருக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 26, 2024 09:10 PM

திருத்தணி:திருத்தணி பீகாக் மருத்துவமனை சார்பில், ஜி.ஆர்.டி., நர்சிங் கல்லுாரி மாணவியருக்கு தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி 'நமோ நவ்மத்தேதா சம்மேளன்' நிகழ்ச்சியின் மூலம் முதல் வாக்காளர்களின் ஓட்டுரிமை பற்றி விழிப்புணர்வு திருத்தணியில்நடந்தது.
இதில் பாரத பிரதமர் மோடி நேரலை மூலம் உரையாடியதை எல்.இ.டி., திரையின் மூலம் மாணவியருக்கு ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி பீகாக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், ஸ்ரீகிரண் பவுண்டேஷன் நிறுவனருமான மருத்துவர் ஸ்ரீகிரண் மற்றும் பா.ஜ. நிர்வாகிகள், பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் உரை முடிந்ததும், மருத்துவர் ஸ்ரீகிரண், மாணவியர் மத்தியில், முதல் ஓட்டுரிமை குறித்தும், அதை யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விகள் கேட்டு பதில் பெற்றார்.
பிரதமர் மோடி, உரையாடியது குறித்து மாணவியரிடம் விளக்கம் கேட்ட போது சிறந்த முறையில் பதில் கூறிய மூன்று மாணவிகளுக்கு பீகாக் மருத்துவமனை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லுாரி துணை முதல்வர் சித்ரா உட்பட, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.

