/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை
/
ஐந்தாவது முறையாக மதுக்கடை முற்றுகை
ADDED : பிப் 01, 2024 09:56 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. தேர்வழி கிராம மக்களுக்கு பல வகையில் இடையூறாக இயங்கி வரும் அந்த மது கடையை மூட வேண்டும் என, பல மாத காலமாக கிராம பெண்கள் போராடி வருகின்றனர்.
கடையை மூட வலியுறுத்தி, நான்கு முறை முற்றுகையிட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இறுதியாக, ஜனவரி மாதம், 31ம் தேதிக்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினத்துடன் கெடு முடிந்த நிலையில், தேர்வழி கிராம பெண்கள் சிலர், நேற்று கடையை ஐந்தாவது முறையாக முற்றுகையிட சென்றனர். இதனால் ஏராளமான போலீசார் மதுக்கடை முன் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயகுமார் பெண்களிடம் சமாதானம் பேசினார். கடையை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கடை இடம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

