/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் பணிகளால் அதிருப்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
/
கால்வாய் பணிகளால் அதிருப்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
கால்வாய் பணிகளால் அதிருப்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
கால்வாய் பணிகளால் அதிருப்தி அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
ADDED : ஜூன் 23, 2025 02:49 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலையில் உள்ள காமராஜ் மண்டப தெருவில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது.
கலெக்டர் பிரதாப், நேற்று முன்தினம் பணியை ஆய்வு செய்தார். அப்போது, நாகலாபுரம் பிரதான சாலையில் இருக்கும் மழைநீர் கால்வாய் உயரமாகவும், அதற்கு இடதுபுறம் மண்டப தெருவில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் தாழ்வாகவும் இருந்தது.
இதை பார்த்த கலெக்டர் பிரதாப், ''உயரமான இடத்தில் உள்ள கால்வாயில் இருந்து, தாழ்வான இடத்தில் கட்டப்பட்டு வரும் கால்வாய்க்கு மழைநீர் சென்றால், மண்டப தெரு முழுதும் தண்ணீர் நிரம்பி விடும்,'' என, கடிந்து கொண்டார்.
மேலும், “சரியாக திட்ட மிட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான இடத்தில் உள்ள கால்வாயை மேடாக்கி, அதன்பின் பணிகளை முழுமையாக மேற்கொள்ளுங்கள்,” என்றார்.