/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்தில் தகராறு: பெண் போலீசுக்கு அடி-
/
பேருந்தில் தகராறு: பெண் போலீசுக்கு அடி-
ADDED : ஜன 27, 2024 01:43 AM
தேனாம்பேட்டை:கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 29. இவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, பேருந்தில் சென்றார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த மீன் பையில் இருந்து, தண்ணீர் கசிந்துள்ளது. தேனாம்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்த போது, தனியார் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதப்படை பெண் போலீஸ் மீனா, 23, என்பவர், அந்த பேருந்தில் ஏறினார்.
அப்போது சங்கீதாவிடம், பலர் பயணிக்கும் பேருந்தில், மீன் தண்ணீர் கசியும்படி செய்யலாமா என, மீனா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மீனாவை அடித்து உதைத்ததாக தெரிகிறது.
உடனே பேருந்து நிறுத்தப்பட்டு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். இதன்படி, சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

