/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு மரக்கன்று வினியோகம்
/
மாணவர்களுக்கு மரக்கன்று வினியோகம்
ADDED : பிப் 01, 2024 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், நொச்சிலி, கிருஷ்ணமராஜகுப்பம், காபூர் கண்டிகை, எகுவமிட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தன்ராஜ், நேற்று மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். மா, பலா, கொய்யா, சப்போட்டா என் பல்வேறு பழமரக்கன்றுகள், 300 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், பள்ளி தலைமையாசிரியர் குர்ரப்பா, உதவி தலைமையாசிரியர் ஆசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

