sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

/

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு

வீடு மறுகட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 15, 2025 08:04 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், நடப்பு நிதியாண்டில், 25,000 வீடுகள் கட்டுவதற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகளில் 90க்கும் மேற்பட்ட வீடுகள் பயன்பெற உள்ளன.

இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறியதாவது:

கடந்த 2001 மார்ச் 31ம் தேதிக்கு முன், அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் வீடு பழுதடைந்திருந்தால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 210 சதுர அடியில் வீடு கட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பட்டா, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், இரண்டு போட்டோ ஆகியவற்றுடன் ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில், அரசு திட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளும், மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, அவர்களும் விண்ணப்பிக்கலாம் என, விதியை தளர்த்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us