/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார் ஆக மாறும் நெற்களம் விவசாயிகள் வேதனை
/
பார் ஆக மாறும் நெற்களம் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 01, 2024 09:50 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஓரத்துார் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மூன்று போகம் விவசாயம் செய்கின்றனர்.
இவர்கள் அறுவடை செய்த நெற்கதிரை பிரித்தெடுத்து, மூட்டைகளில் அடைத்து எடுத்து செல்ல ஏதுவாக கடந்தாண்டு திருவாலங்காடு நெடுஞ்சாலை ஓரத்தில், 7 லட்சத்து 15,000 ரூபாய் மதிப்பில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெற்களத்தை இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் நெற்களத்தில் அமர்ந்து மது அருந்துவதுடன் பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு காவல் துறையினர், நெற்களத்தில் அமர்ந்து மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

