/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்'ஆக மாறிய நெற்களம் அதிர்ச்சியில் விவசாயிகள்
/
'பார்'ஆக மாறிய நெற்களம் அதிர்ச்சியில் விவசாயிகள்
ADDED : செப் 19, 2025 02:41 AM

கடம்பத்துார்:வெள்ளேரிதாங்கல் பகுதியில் உள்ள நெற்களம் குடி மையமாக மாறியுள்ளது விவசாயிகரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் நெற்களம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த 2021-22ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 7.21 லட்சம் மதிப்பில் புதிய நெற்களம் என்னும் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நெற்களத்தை குடிமகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர். இது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நெற்களத்தை சீரமைத்து சுற்றி வேலி அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.