sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

7 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் எரிவாயு தகனமேடை

/

7 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் எரிவாயு தகனமேடை

7 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் எரிவாயு தகனமேடை

7 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் எரிவாயு தகனமேடை


ADDED : பிப் 29, 2024 07:14 PM

Google News

ADDED : பிப் 29, 2024 07:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் சடலங்களை எரித்து இறுதி சடங்கு செய்வதற்காக, கள்ளுக்கடைமேடு, சின்னகாவணம், பஞ்செட்டி சாலை, பெரியகாவணம் ஆகிய இடங்களில் தகனமேடைகள் உள்ளன.

அங்கு சடலங்களை எரியூட்டும்போது, அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.

அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளின் சுகாதாரம் கருதி, கடந்த 2022ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.40 கோடி ரூபாய் செலவில், நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

மொத்தம், 2,800 சதுரடி பரப்பளவில் கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைப்போக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் முடிந்தன.

சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின் இணைப்பு, சுற்றுச்சுவர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளும், கடந்த ஜூலை மாதம் நிறைவுபெற்றன.

பணிகள் முடிந்து, ஏழு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எரிவாயு தகனமேடை அமைந்தும், பயனுக்கு வராத நிலையில், இறந்தவர்களின் சடலங்கள் மரக்கட்டைகளை கொண்டு எரியூட்டப்படுகின்றன.

அதலிருந்து துர்நாற்றம் வீசுவதும், சுடுகாடுகளின் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளின் சுகாதார பாதிப்புகளும் தொடர்கதையாக உள்ளது.

எனவே, நவீன எரிவாயு தகனமேடையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us