/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
/
526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
ADDED : செப் 18, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில், அக்.,2ல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காலை 11:00 மணியளவில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விவாதங்களில் பங்கேற்று, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.