/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கடும் நெரிசல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
/
திருவள்ளூரில் கடும் நெரிசல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
திருவள்ளூரில் கடும் நெரிசல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
திருவள்ளூரில் கடும் நெரிசல் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
ADDED : ஜன 25, 2024 10:48 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், பெரியகுப்பம் மேம்பாலத்தில் இருந்து, ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை மற்றும் தேரடி ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.
சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில் இருந்து, திருத்தணி, திருப்பதி, செங்குன்றம் செல்லும் வாகனங்கள், இச்சாலைகளை பயன்படுத்தி வருகின்றன.
திருவள்ளூரில் புறவழிச்சாலை இல்லாததால், இச்சாலைகள் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் காலை கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை மற்றும் செங்குன்றம் சாலைகளில், கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும், உழவர் சந்தை அருகில் இருந்து, பேருந்து நிலையத்திற்கு செல்லும் வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவித்தன. 3 கி.மீட்டர் துாரத்தில் உள்ள சாலைகளில், வாகனங்கள் பல மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்தன.
மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, திருவள்ளூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மணவாள நகர் - திருப்பாச்சூர் வரை அறிவிக்கப்பட்ட, புறவழிச்சாலையை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

