/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைப்பு
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைப்பு
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைப்பு
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கி வைப்பு
ADDED : ஜன 25, 2024 11:02 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
நாடு முழுதும், ஜன.,25 தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. எதிர்வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைவரும் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, மகளிர் குழுவினர் வரைந்த வாக்காளர் விழிப்புணர்வு கோலத்தை பார்வையிட்டார். பின், சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டினார். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும், கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்த பிரசார வாகனம், மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும் வலம் வந்து, வாக்காளர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டு அளிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மாலதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி வருவாய் துறையின் சார்பில், தேசிய வாக்காளர் தினம் ஒட்டி திருத்தணி கமலா தியேட்டர் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. திருத்தணி தாசில்தார் மதன் தலைமை வகித்தார்.
இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார்.  ம.பொ.சி.சாலை, அரக்கோணம் மற்றும் அக்கைய்யாநாயுடு சாலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

