/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிண்டி ஐ.டி.ஐ., அணி வாலிபாலில் 'சாம்பியன்'
/
கிண்டி ஐ.டி.ஐ., அணி வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : பிப் 29, 2024 10:00 PM

சென்னை:தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் கத்திவாக்கம், வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில், மண்டல அளவில் பல விளையாட்டுப் போட்டிகள், சேத்துப்பட்டு நேரு பார்க் மைதானத்தில் நடக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மொத்தம் 14 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் பங்கேற்றுள்ளன.
முதல் நாள் ஆடவருக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று பெண்களுக்கான போட்டிகள் துவங்கின.
அவற்றில் வாலிபால், தடகளம், வளையப்பந்து, பால்பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
வாலிபால் போட்டியில் முதல் அரையிறுதியில், அம்பத்துார் பெண்கள் ஐ.டி.ஐ., மற்றும் இருபாலர் பயிலும் அம்பத்துார் அணிகள் எதிர்கொண்டன. இதில், 2 - 1 என்ற செட் கணக்கில் அம்பத்துார் இருபாலர் பயிலும் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் கிண்டி ஐ.டி.ஐ., அணி, 2 - 1 என்ற கணக்கில் வேலுார் ஐ.டி.ஐ., அணியை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இறுதி போட்டியில், அம்பத்துார் இருபாலர் அணியை 2 - 1 என்ற செட் கணக்கில் கிண்டி ஐ.டி.ஐ., வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. மற்ற போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான பெண்கள் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள். இடம்: சேத்துப்பட்டு.

