/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பு
/
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பு
ADDED : செப் 29, 2025 01:12 AM

திருமழிசை:தண்டலம் பகுதியில் சேதமான கிருஷ்ணா கால்வாயின் கரையை நீர்வள துறையினர் சீரமைத்தனர்.
பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உருவாகும் கூவம் ஆறு அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து தண்டலம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
இதில் தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவகல்லுாரி மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை கிருஷ்ணா கால்வாயில் கலக்கும்வகையில் கரையை சேதப்படுத்தினர்.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து திருவள்ளூர் நீர்வள துறையினர், சேதப்படுத்தப்பட்ட கிரு ஷ்ணா கால்வாய் கரை முழுதும் சீரமைத்து கழிவுநீர் கலப்பதை தடுத்துநிறுத்தினர். கழிவுநீர் செல்ல கால்வாய் கரையை மீண்டும் சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச் சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

