/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணசமுத்திரம் ஏரி மீன்கள் ஏலம்
/
கிருஷ்ணசமுத்திரம் ஏரி மீன்கள் ஏலம்
ADDED : ஜன 25, 2024 08:17 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஏரி, 276 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒன்றியத்திலேயே இந்த ஏரி தான் மிகப் பெரியது. வடகிழக்கு பருவ மழை மற்றும் 'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையால், கிருஷ்ணசமுத்திரம் ஏரி முழுமையாக நிரம்பியது.
இந்நிலையில், திருத்தணி நீர்வளத் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஏரியில் இருக்கும் மீன்களை பிடிப்பதற்கு ஏலம் விட தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான பொது ஏலத்தை, நேற்று முன்தினம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் காளம்பரி, ஊராட்சி தலைவர் நாகசாமி, கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்தது.
இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ஓராண்டிற்கு, 1.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள், ஏலம் விட்டதற்கான ஆணையை மகேஷிடம் வழங்கினர்.

