/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்
/
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்
மொபைல்போன் டவருக்கு எதிர்ப்பு குறுவாயல் கிராமத்தினர் போராட்டம்
ADDED : பிப் 29, 2024 09:42 PM
பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே உள்ள குறுவாயல் கிராமத்தில், 2,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.
இப்பகுதியில் சில நாட்களாக தனியார் சார்பில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அப்பகுதி வாசிகள், தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெரியபாளையம் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, கடந்த 13ம் தேதி திருவள்ளூர் ஆ.டி.ஓ., அலுலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், குறுவாயல் கிராமத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியினர் மீண்டும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.