ADDED : செப் 30, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:நகராட்சியில் நடந்த துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமில், 170 பேருக்கு சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டன.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், பீகாக் மருத்துவமனை சார்பில் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமை நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று, துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், நோய் சம்மந்தமான அறிகுறிகள் மற்றும் அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் முகாமில் இலவசமாக வழங்கப்பட்டன. துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

