/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரளை கற்கள் பெயர்ந்த தரைப்பாலம் சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஜன 25, 2024 08:21 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் சந்திப்பில் இருந்து பி.என்.கண்டிகை, கே.என்.கண்டிகை, குமரசிருளப்பாக்கம் வழியாக தேவதானம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக மேற்கண்ட கிராமவாசிகளும், பிரசித்தி பெற்ற தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர்.
இதில் தேவதானம் ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுதும் சேதமடைந்து கிடக்கிறது.
சரளை கற்கள் பெயர்ந்து கரடு முரடாகவும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
பள்ளங்களையும், பெயர்ந்து கிடக்கும் சரளைகற்களையும் தவிர்க்க மாற்றுத்திசையில் பயணித்து எதிரில் வரும்வாகனங்களுடன் மோதி சிறு சிறு விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர். இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் கூடுதல் சிரமங்களை சந்திக்கின்றனர்.
பொன்னேரி பகுதியில் இருந்து தேவதானம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேற்கண்ட தரைப்பாலம் பகுதியை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.